ரிலையன்ஸ்- டிஸ்னி ஒப்பந்தத்திற்குப் பிறகு ஹாட் ஸ்டாருடன் இணையும் ஜியோ சினிமா?
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
- ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்க திட்டம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை அதன் சொந்த ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோ சினிமாவுடன், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 இணைப்பிற்குப் பிறகு இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விளைவாக மூத்த பங்குதாரராக ஆவதற்கு ஒரு லாபகரமான பேரம் நடத்தி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சந்தைகளில் ஒன்றான லீடர்போர்டில் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், வயாகாம் நிறுவனத்தின் ஊடகச் செயல்பாடுகள், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் ஸ்டார் இந்தியா உடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து ரூ. 70,352 கோடி மதிப்புள்ள இந்த கூட்டு முயற்சியில், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அதன் வளர்ச்சி ஆதரிக்க முயற்சியில் ரூ.11,500 கோடி செலுத்தும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டார் இந்தியா மற்றும் வயாகாம்18 ஆகியவற்றின் இணைப்பிற்குப் பிறகு ஜியோ சினிமாவை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒற்றை ஒடிடி இயங்குதளத்தை இயக்குவது செலவுகளைச் சேமிக்கவும், யூடியூப், நெட்ப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களுக்கு வலுவான போட்டியை அளிக்கவும் உதவும் என்பதால் இந்த நடவடிக்கை சாத்தியமாகும் என கூறப்படுகிறது.