ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: பிபவ் குமார் மீது டெல்லி போலீஸ் வழக்கு
- இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுமீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவருகின்றன.
- ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதையடுத்து, டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் எழுத்துப்பூர்வமாக போலீசிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.