இந்தியா

கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்: கே.டி.ராமாராவ்

Published On 2023-11-30 16:04 GMT   |   Update On 2023-11-30 16:04 GMT
  • 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
  • வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியானது.

ஐதராபாத்:

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 64 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஓங்கும் என தெரிகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மந்திரி கே.டி.ராமாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கருத்து கணிப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் சந்திரசேகர ராவ் முதல் மந்திரி ஆவார். கடந்த 2018- தேர்தலின் போது இதேபோன்று எங்களுக்கு பாதகமான கருத்து கணிப்புகள் வெளியாயின. ஆனால் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் இம்முறையும் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News