இந்தியா

ராவணன் பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிய அசாம் முதல்வர்

Published On 2024-01-23 02:49 GMT   |   Update On 2024-01-23 02:49 GMT
  • 500 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நேற்று) ராமரை பற்றி பேச நல்ல நாள்.
  • ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா? என்றார் அசாம் முதல்வர்.

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநிலத்தில் பல்வேறு தடங்கல் ஏற்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் காரணம் எனவும் விமர்சனம் செய்துள்ளது. தடங்கல் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை அசாமில் உள்ள கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். நான் என்ன குற்றம் செய்தேன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். இன்று (நேற்று) ராமரை பற்றி பேசலாமா?. 500 ஆண்டுகள் கழித்து ராமரை பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ராவணனை பற்றி பேச வேண்டாம்" என்றார்.

நடைபயணம் தொடர்பாக காங்கிரஸ்க்கும், ஹிமாந்தா பிஸ்வா சர்மவுக்கும் இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், தற்போது ராகுல் காந்தியை ராவணன் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா மறைமுக தாக்கியுள்ளார்.

Tags:    

Similar News