அவர் பார்க்க இங்க என்ன இருக்கு? ராகுல் வருகையை சாடிய கிராம மக்கள்
- ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க ராகுல் காந்தி முடிவு செய்தார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.
இதை தொடர்ந்து, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு சென்ற ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் மக்கள் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், (ராகுல்) காரில் இருந்து சேற்றில் இறங்குவதைப் பற்றி கவலைப்பட்டார் அவர் ஏன் இங்கு வந்தார்? அவர் பார்க்க என்ன இருக்கிறது என்று ஒருவர் கோபமாக கேள்வி கேட்பதைக் காண முடிகிறது.
முன்னதாக, வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்தார்.