இந்தியா

அயோத்தியில் கும்பாபிஷேக விழா- ராமருக்கு 2.5 கிலோ எடையுள்ள வில் காணிக்கை

Published On 2024-01-12 10:00 GMT   |   Update On 2024-01-12 10:00 GMT
  • ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
  • வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.

2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News