இந்தியா

மோடி மராட்டியம் வரும்போது மாநிலம் பாதுகாப்பற்றதாகிறது: சஞ்சய் ராவத்

Published On 2024-11-09 08:52 GMT   |   Update On 2024-11-09 08:52 GMT
  • நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- மோடி
  • முன்னதாக நாம் பிரிந்தால் பிரிக்கப்படுவோம் என்ற ஸ்லோகம் தோல்வியடைந்தது. தற்போது அவர் புதிய ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஒற்றை நோக்கம், ஒரு சாதியினரை மற்ற சாதியினருக்கு எதிராக சண்டையிட வைப்பதுதான். அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.க்களின் வளர்ச்சியை விரும்புவதில்லை. அவர்கள் அங்கீகாரம் பெறுவதை விரும்புவதில்லை. நாம் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு பாதுகாப்பானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.

சஞ்சய் ராவத் இது தொடர்பாக கூறுகையில் "மோடி இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்னதாக நாம் பிரிந்தால் பிரிக்கப்படுவோம் என்ற ஸ்லோகம் தோல்வியடைந்தது. தற்போது அவர் புதிய ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மக்கள் ஏற்கனவே பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மோடி இங்கு வரும்போதெல்லாம் பிரிவு மற்றும் அசாதாரணை நிலையை தூண்டிவிடுவதால் பாதுகாப்பற்ற மாநிலமாகிறது. உண்மையான பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் பா.ஜ.க.வை நீக்க வேண்டும்

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News