இந்தியா

மாட்டு சாணம் அள்ள மாட்டியா.. ஆதிக்க சாதியினரால் மொட்டையடித்து சித்ரவதை செய்யப்பட்ட நபர் - வீடியோ

Published On 2024-10-26 07:06 GMT   |   Update On 2024-10-26 07:06 GMT
  • கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தி வந்துள்ளனர்.
  • கை கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அவரது வாயில் தண்ணீரை ஊற்றி மூச்சிரைக்க வைத்துள்ளனர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிஇல் உலா பாத்ரி கிராமத்தில் வசித்து வருபவர் பாபா காபுதரா [45 வயது]. இவர் விவசாய கூலியாக வேலை பார்த்து வருபவர். அருகில் உள்ள தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் இவரை தங்கள் வீட்டின் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பது, அவற்றில் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தி வந்துள்ளனர்.

ஆனால் பாபா அதை செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில் தனது கிராமத்தில் வேர்க்கடலை அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த அவரை தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நால்வர் காரில் வந்து கடத்திக்கொண்டு தங்கள் கிராமத்து தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அவரது கை கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அவரது வாயில் தண்ணீரை ஊற்றி மூச்சிரைக்க வைத்து சித்திரவதை செய்துள்ளனர். தன்னை விட்டு விடுமாறு பாபா கெஞ்சியும் இரக்கம் காட்டாமல் அவரை சித்ரவதை செய்து சிரித்து கேலி செய்துள்ளனர்.

அதோடு நிற்காமல் அவரது தலையை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து சென்று அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் இதுதொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags:    

Similar News