இந்தியா
குறைந்த கல்வித்தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து- மணிஷ் சிசோடியா
- கடந்த சில ஆண்டுகளில் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் படித்த பிரதமர் தேவை.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தபடி மணிஷ் சிசோடியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மணிஷ் சிசோடியா கூறியிருப்பதாவது:- குறைந்த கல்வித்தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து. எந்த ஒரு சமுதாயத்திற்கும் கல்வியே அடித்தளம். சமுதாயத்தில் கல்வியை வலுப்படுத்த வேண்டும். ஆனால் மாறாக கடந்த சில ஆண்டுகளில் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன . பிரதமரின் கல்வியறிவு குறைவாக இருந்தால், அது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் படித்த பிரதமர் தேவை" என்று தெரிவித்துள்ளார்.