இந்தியா

மைக் ஆஃப் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு: என்னிடம் ரிமோட் கன்ட்ரோல் இல்லை என சபாநாயகர் பதில்

Published On 2024-07-01 11:42 GMT   |   Update On 2024-07-01 12:03 GMT
  • சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர்.
  • யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது.

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக மக்களவையில் பேசும்போது தன்னுடைய மைக்ரோபோன் ஆஃப் செய்யப்பட்டது எனக் கூறினார். எதிர்க்கட்சிகளும் சபாநாயகர்தான் மைக்கை ஆஃப் செய்ததாக விமர்சித்தினர்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் ஓம் பிர்லா இது தொடர்பாக பேசினார். அப்போது மைக்கின் ரிமோட் கன்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று கூறினார். மேலும், எவ்வாறு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பான விவகாரம் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர். யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது. சபாநாயகர் இருக்கையில் அமரும் நபரிடம் மைக்ரோபோனை ஆஃப் செய்யக்கூடிய ரிமோட் கன்ட்ரோல் கிடையாது.

இந்த விவகாரம் சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பானது. இந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் இதுபோன்ற ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கூடாது. கே. சுரேஷ் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துள்ளார். சபாநாயகர் இருக்கை மைக்கை கட்டுப்படுத்துகிறதா?.

இவ்வாற பிர்லா தெரிவித்தார்.

Tags:    

Similar News