சிஏஏ குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது: இந்திய வெளியுறவுத்துறை
- சிஏஏ எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- சிஏஏ குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை, அது தவறானது, தவறான தகவல் மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
சிஏஏ 2019 இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப உள்ளது.
டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என தெரிவித்தார்.
#WATCH | On CAA, MEA Spokesperson Randhir Jaiswal says, "As you are well aware, the Citizenship Amendment Act 2019 is an internal matter of India and is in keeping with India's inclusive traditions and a long-standing commitment to human rights. The act grants a safe haven to… pic.twitter.com/cJBiDvI7JU
— ANI (@ANI) March 15, 2024