இந்தியா
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு வீட்டுக்காவலா?
- காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள்.
- அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர்.
ஸ்ரீநகர்:
கடந்த 21-ந் தேதி, காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சுரான்கோட் பகுதியில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலியானார்கள். அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை ராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்து சென்றனர். 3 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று சுரான்கோட் பகுதிக்கு சென்று, பலியானோர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தார்.
அவரது பயணத்தை தடுக்கும்வகையில், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி, தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் குற்றம்சாட்டி உள்ளது. அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.