இந்தியா

'நாடு முழுவதும் நமோ நகர்களை உருவாக்க வேண்டும்'.. மாநிலங்களவையில் பாஜக எம்.பி. தனி நபர் மசோதா

Published On 2024-08-02 03:22 GMT   |   Update On 2024-08-02 05:03 GMT
  • மாநிலங்களவையில் பாஜக எம்.பி எம்.பி பீம் சிங் தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.
  • இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது.

நாடு முழுவதும் நகரமயமாக்கலை அதிகரித்து ஹை- டெக் நகர்களை உருவாக்கி அதற்கு நமோ நகர்கள் என்று பெயரிட வேண்டும் என மாநிலங்களவையில் பாஜக எம்.பி தனி நபர் மசோதா கொண்டுவந்துள்ளார்.

இந்த மசோதா மீதான விவாதம் இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் நடக்க உள்ளது. பீகாரைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி பீம் சிங்கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில் , நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமங்களை விட நகர மக்கள் அதிக முன்னேற்றம் அடைத்துள்ளன.

ஆனாலும் நகரமயமாக்கல் குறைந்த அளவே நடந்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு [பாஜக]அரசு கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்தி, நகரமயமாக்கலை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக சண்டிகர் மாநிலத்தில்  சமீப காலங்களாக நகரமயமால் மூலம் அதிக பொருளாதார நன்மைகள் கிடைத்து வருகிறது.

அவ்வாறு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்படும் ஹை- டெக் நகரங்களுக்கு நமோ நகர் என்று பெயரிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் 'ந'ரேந்திர 'மோ'டியின் பெயரை சுருக்கி நமோ என பாஜவினர் குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது.  

 

Tags:    

Similar News