பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்ந்தால் இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியாத காலம் வரும்: பரூக் அப்துல்லா
- பயங்கரவாதம் அதிகரித்து வருவதில் எந்த சந்தேகம் இல்லை.
- மிகவும் பயிற்சி பெற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு, கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் அடிக்கடி கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள். நன்கு பயிற்சி பெற்றவர்கள் எல்லை வழியாக ஊடுருவி ஜம்மு-காஷ்மீரில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வந்த போதிலும் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இதனால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேசிய மாநாடு கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-
பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவம் தொடர்ந்து நீடித்தால் இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாத காலம் வரும். பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுகக் வேண்டும். பயங்கரவாதம் அதிகரித்து வருவதில் எந்த சந்தேகம் இல்லை. மிகவும் பயிற்சி பெற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். தற்போதைய சூழ்நிலை எங்களுக்கான எச்சரிக்கை மற்றும் அபாயகரமானது.
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.