இந்தியா

தென் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்- ரேவந்த் ரெட்டி

Published On 2024-05-28 06:00 GMT   |   Update On 2024-05-28 06:00 GMT
  • பா.ஜ.க கூட்டணி தென் மாநிலங்களில் பல இடங்களில் டெபாசிட் கூட இழக்க நேரிடலாம்.
  • இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கேரளா மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.

தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 130 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பா.ஜ.க கூட்டணி தென் மாநிலங்களில் பல இடங்களில் டெபாசிட் கூட இழக்க நேரிடலாம்.

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து அவர்கள் 20 இடங்களுக்கு கீழ் தான் வெற்றி பெறுவார்கள்.

குஜராத், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த முறை கிடைத்ததில் பாதி இடங்கள் தான் பா.ஜ.க.விற்கு கிடைக்கும். இதனால் அவர்கள் எங்கிருந்து 400 இடங்களில் வெற்றி பெறப் போகிறார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த முறை வகுப்புவாத சக்திகள் வெற்றி பெற்றால் நமது நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் இட ஒதுக்கீடுக்கும் ஆபத்தானது.

அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள்.

கேரளா மாநிலத்தில் மதவாத சக்திகள் நுழைய மக்கள் ஒருபோதும் அனுமதிக்காததால் ஒவ்வொரு முறையும் கேரளாவுக்கு வரும்போது பொறாமைப்படுகிறேன்.

அடுத்த தலைமுறையை பாதுகாக்க வகுப்புவாத சக்திகளை எப்படி எதிர்த்து போராடுவது என்பதை நான் கேரளாவிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News