இந்தியா

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீட்டா அம்பானி ஒருமனதாக தேர்வு

Published On 2024-07-25 01:36 GMT   |   Update On 2024-07-25 01:36 GMT
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் நீட்டா அம்பானி.
  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி 100% வாக்குகள் பெற்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நீட்டா அம்பானி, " சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீட்டா அம்பானி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் அப்போது படைத்தார். 

Tags:    

Similar News