இந்தியா

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை

Published On 2024-07-27 07:49 GMT   |   Update On 2024-07-27 07:49 GMT
  • இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

அதே சமயம் எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜியும் வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நிதிஷ்குமாருக்கு பதிலாக பீகாரின் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News