இந்தியா

அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?: புதிய விளக்கம் அளித்த மத்திய பிரதேச மந்திரி

Published On 2024-09-11 22:46 GMT   |   Update On 2024-09-11 23:18 GMT
  • இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
  • அமெரிக்காவை நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்றார்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தின் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மாநிலத்தின் கல்வி மந்திரி இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிக்கவில்லை. நமது முன்னோர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

8-ம் நூற்றாண்டில் ஒரு இந்திய மாலுமி அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோவில்களைக் கட்டினார். அவை இன்னும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதை நம் மாணவர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.

குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் 5,500 ஆண்டுகள் பழமையான 2 பெரிய மைதானங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் விளையாட்டைப் பற்றி விரிவாக அறிந்திருந்தனர். அதற்காக பெரிய மைதானங்களைக் கட்டியுள்ளனர்.

ராமர் சிலைகளை உருவாக்கிய பால் பாகு என்ற இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பீஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது.

ரிக் வேதத்தை எழுதியவர்கள்தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தார்கள். திட்டமிட்டு இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News