புது ஸ்கூட்டர்.. பிரச்சனை தீர்க்கப்படவில்லை.. நீதிமன்றத்தை நாடிய பயனர் - ஓலாவுக்கு நீதிபதி குட்டு
- எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹார்ன் மற்றும் பேனல் போர்டு டிஸ்பிளே போன்ற பாகங்கள் இயங்காததால் ஷோருமில் புகார் அளித்துள்ளார்.
- பல முறை நினைவூட்டியும் ஷோரூம் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பழுதடைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்து செய்ததற்காக ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.94 லட்சத்தை வழங்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.டி.நகரில் வசிக்கும் நிஷாத் என்பவர் 2023 டிசம்பரில், ஓலா ஸ்கூட்டரை வாங்க ஷோரூம் விலையாக ரூ. 1.47 லட்சம் மற்றும் பதிவு மற்றும் பிற கட்டணங்களுக்கு ரூ.16,000 செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹார்ன் மற்றும் பேனல் போர்டு டிஸ்பிளே போன்ற பாகங்கள் இயங்காததால் ஷோருமில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் பல முறை நினைவூட்டியும் ஷோரூம் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் நிஷாத், பெங்களூரு, 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 10-ந்தேதி தீர்ப்பளித்தார். அதில் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
அப்போது, புகார்தாரர் செலுத்திய முழுத் தொகையும் செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் ரூ.1.62 லட்சத்தைத் திருப்பித் தர வேண்டும். புகார்தாரருக்கு ஏற்பட்ட மன வேதனை மற்றும் சிரமத்திற்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 என மொத்தம் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் வழங்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.