இந்தியா

1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: ப.சிதம்பரம் கிண்டல்

Published On 2023-05-20 02:06 GMT   |   Update On 2023-05-20 02:06 GMT
  • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல.
  • ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது.

புதுடெல்லி :

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு, ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எளிதாக பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்டு அதனை மறைக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு அரசும், ஆர்.பி.ஐ.யும் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1,000 ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.ஐ.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News