இந்தியா
ரீமால் புயல் எதிரொலி: பிரதமர் மோடி ஆலோசனை
- வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
- கொல்கத்தாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், இன்று இரவு மேற்கு வங்காளம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரீமால் புயலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.