இந்தியா
நிலவில் தரையிறங்கிய ஸ்லிம் விண்கலம்: ஜப்பானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தின் லேண்டர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
- அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது.
புதுடெல்லி:
ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.
இதன்மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு வாழ்த்துக்கள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.