இந்தியா

ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு

Published On 2024-09-17 05:32 GMT   |   Update On 2024-09-17 05:32 GMT
  • வெறுப்பால் நிரப்பப்பட்டவர்கள் இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள்.
  • நாட்டின் நலன்களுக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள்.

காந்திநகர்:

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பிரதமர் மோடி, பா.ஜ.க. வை விமர்சித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேட்டி அளித்தார். இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயரை கெடுக்கிறார் என்றும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிறார் என்றும் குற்றச்சாட்டியது.

இந்த நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெறுப்பால் நிரப்பப்பட்டவர்கள் இந்தியாவை இழிவுபடுத்துகிறார்கள். நாட்டின் நலன்களுக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குறி வைக்கின்றனர். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றனர்.

500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தார். ஆனால் அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள். இது போன்ற பிளவுபடுத்தும் சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News