இந்தியா

உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது: பிரதமர் மோடி

Published On 2023-11-26 07:12 GMT   |   Update On 2023-11-26 07:12 GMT
  • மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
  • உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மூலம் இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என்றார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி 107-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:

நாட்டைக் கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

நவம்பர் 26-ம் தேதியை யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டில் கொடூர தாக்குதல் நடந்த தினம் இன்று. மும்பை பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் மற்றொரு முக்கியமான நாள். இந்த நாளில்தான் 1949-ம் ஆண்டு அரசியல் அமைப்பை, அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டது. நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் ஆகி உள்ளது.

உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவு பிரசாரம், நாட்டிற்கு பல வாய்ப்புகளைத் திறந்துள்ளது. நமது பொருளாதாரத்திற்கு வலிமையை அளித்துள்ளது. நாட்டின் சமமான வளர்ச்சியை உறுதி செய்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம் ஏற்றத்தாழ்வு கண்டபோது உள்ளூர் பொருட்களுக்கான நமது ஆதரவானது, இந்திய பொருளாதாரத்தை வலுவாக்க உதவியது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News