இந்தியா
6 நாட்களில் 6 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறக்கிறார்
- பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார்.
- வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஜம்முவில் நடைபெறும் விழாவில், சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.
அந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,660 கோடி செலவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இவ்விழா நடக்கிறது.
ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரபிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளை அவர் திறந்து வைக்கிறார்.