இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி: அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்- அமித் ஷா

Published On 2024-05-15 09:27 GMT   |   Update On 2024-05-15 09:27 GMT
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது.
  • ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம்.

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் செரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம். முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) கோஷத்தை இங்கே கேட்டோம். தற்போது அதே கோஷத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரில் நடைபெறுகிறது.

மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம் எடுத்துக் கொள்வோம் என்பத நான் சொல்கிறேன்.

ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏ-விற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியர்வர்கள ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Tags:    

Similar News