பூரம் திருவிழாவிற்கு ஆம்புலன்சில் பயணித்த சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு
- திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
- திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
திரிச்சூர் பூரம் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்சில் பயணித்து சம்பவ இடத்திற்கு சுரேஷ் கோபி சென்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சுரேஷ் கோபி, "பூரம் திருவிழாவின் குளறுபடிக்கு பின்னல் சதி உள்ளது. இதில் அரசியல் தலையீடு உள்ளதா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்சில் சென்றேன்" என்று தெரிவித்தார்.