இந்தியா

டெல்லியில் தொடரும் காற்று மாசு- உலக சுகாதார அமைப்பின் வரம்பைவிட 100 மடங்கு அதிகரிப்பு

Published On 2023-11-05 09:21 GMT   |   Update On 2023-11-05 09:21 GMT
  • நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.
  • டெல்லியில் காற்று மாசு இன்று நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது.

டெல்லி முழுவதும் உள்ள அனைத்து காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களும் பிஎம்2.5 அளவு 450 மைக்ரான்களுக்கு மேல் இருப்பதாக தெரிவித்துள்ளன.

டெல்லியின் காற்றின் தரம் மீண்டும் 'கடுமையான' பிரிவில் சரிந்து, இன்று நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக தேசிய தலைநகர் மாறியுள்ளது.

நிகழ்நேர காற்றுத் தரக் குறியீடு (AQI) தலைநகரின் பல்வேறு பகுதிகளில் 500க்கு மேல் உள்ளது. நண்பகலில், டெல்லியில் உள்ள வஜிர்பூர் கண்காணிப்பு நிலையத்தில் அதிகபட்ச அளவு 859 ஆக பதிவாகியுள்ளது.

டெல்லியில் பிஎம்2.5 செறிவு நிலை தற்போது உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்றின் தர வழிகாட்டுதல் மதிப்பை விட 96.2 மடங்கு அதிகமாக உள்ளது.

டெல்லியில் மாசு அளவு உலக சுகாதார அமைப்பு அறிவித்த வரம்புகளை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம் எனவும் தொடர்ந்து நான்காவது நாளாக 500ஐ தாண்டியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News