இந்தியா

எங்கள் தந்தை கொலை வழக்கில் உட்படுத்தப்பட்டவரை ஆரத் தழுவினார் பிரியங்கா - ராகுல் காந்தி

Published On 2024-11-03 15:42 GMT   |   Update On 2024-11-03 15:42 GMT
  • பிரதமர் மோடி குறித்து பேசப்போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
  • வேட்பாளர் பற்றியே நான் உங்களிடம் பேசி விடுகிறேன்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு வாக்கு சேகரிக்க காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி வயநாடு வந்திருந்தார். அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து பேசப்போவதில்லை என்றும், அவ்வாறு செய்து சலித்து விட்டது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த கூட்டத்தில் அரசியல் உரையாற்றுவது மற்றும் என் குடும்பத்தாருடன் பேசுவது என இரண்டு விருப்பங்கள் என் முன்பு இருக்கிறது. ஆனால், நான் என் குடும்பத்தாருடன் பேசுவதை போல் உங்களிடம் பேசவே விரும்புகிறேன். வேட்பாளர் பற்றியே நான் உங்களிடம் பேசி விடுகிறேன். என் சகோதரி எப்போதும் பிரசாரம் செய்யும் ஒரவராகவே இருந்து வந்துள்ளார்."

"ஒவ்வொருத்தர் மீதும் பல லட்சம் லேபிள்கள் இருப்பதை என் சகோதரி புரிந்து கொள்வார். அவர் ஒவ்வொரு நபர், ஒவ்வொன்றும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்பவர். சிலர் முடியாத விஷயங்களாக பார்ப்பர், சிலர் அதில் உள்ள பலத்தை மட்டும் பார்ப்பார். அது தான் என் சகோதரி."

"என் தந்தை (ராஜீவ் காந்தி) கொலை வழக்கில் உட்படுத்தப்பட்ட பெண்ணை (நளினி) நேரில் சென்று சந்தித்து கட்டியணைத்துக் கொண்டவர் என் சகோதரி. அவரை சந்தித்த பிறகு என்னிடம் பேசிய பிரியங்கா மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அப்போது, நளினிக்காக நான் மோசமாக உணர்கிறேன் என்று கூறினார்," என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News