உ.பி.யில் தடுப்புகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்
- இரண்டு மற்றும் மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உத்தரபிரதேச அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள மறுஆய்வு அலுவலர்கள், துணை மறுஆய்வு அலுவலர்கள் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 வேளைகளில் நடத்தப்படும் என யுபிபிஎஸ்சி அறிவித்து இருந்தது.
அதேபோல பிராந்திய குடிமைப் பணி தேர்வு அடுத்த மாதம் 7 மற்றும் 8ந்தேதிகளில் இருவேளைகளில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த இரு தேர்வுகளும் 2 நாட்கள் நடத்தப்படுவதற்கும் இரண்டு மற்றும் மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேர்வர்கள் இன்று யுபிபிஎஸ்சி அலுவலகத்தின் கேட் எண் 2 அருகே வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது சில பேரை பிடித்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.