இந்தியா

ராகுலின் உ.பி. நடைபயணத்தில் மாற்றம்

Published On 2024-02-12 07:16 GMT   |   Update On 2024-02-12 07:16 GMT
  • மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

லக்னோ:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது அவரது நடைபயணம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது.

இன்று (திங்கட்கிழமை) காலை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் ராகுல் நடைபயணம் சென்றார். அப்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுகிறது. அந்த பணம் பணக்காரர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது" என்று பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராகுல் வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். உத்தரபிரதேசத்தில் 22-ந் தேதி முதல் 26-ந்தேதி அவர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

தற்போது உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில் 21-ந்தேதியுடன் ராகுல் நடைபயணத்தை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News