இந்தியா

எம்.எஸ்.பி. என்ற ஆயுதத்தால் விவசாயிகளை கடனிலிருந்து மீட்போம்: ராகுல் காந்தி

Published On 2024-07-31 13:21 GMT   |   Update On 2024-07-31 13:21 GMT
  • தெலுங்கானாவில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ரேவந்த் ரெட்டி கூறினார்.
  • விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

புதுடெல்லி:

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, விவசாயிகள் கடன் தொகைக்கான இரண்டாவது தவணையை முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

தெலுங்கானா விவசாய சகோதர, சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

தேர்தல் வாக்குறுதியின்பட, தெலுங்கானா அரசு விவசாயக் கடன் தள்ளுபடியின் இரண்டாவது தவணையை வெளியிட்டுள்ளது.

ஒருபுறம், பா.ஜ.க. அரசு நாட்டின் விவசாயிகளை கடன் வலையில் சிக்க வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கை மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மறுத்து வருகிறது.

மறுபுறம், காங்கிரஸ் விவசாயிகளுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

எம்.எஸ்.பி.க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்ற ஆயுதத்தை வழங்குவதன் மூலம் இந்தக் கடன் பொறியிலிருந்து இந்தியா கூட்டணி விவசாயிகளை விடுவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News