இந்தியா (National)

உழைப்பு, தன்னம்பிக்கையால் ரத்தினமாக ஜொலித்த ரத்தன் டாடா

Published On 2024-10-09 21:49 GMT   |   Update On 2024-10-09 21:49 GMT
  • நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.
  • தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86). உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார்.

தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு:

நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக 1937, டிசம்பர் 28-ல் சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் படிப்பை முடித்த ரத்தன் டாடா ஐ.பி.எம்.இல் பணிக்கு சேர்ந்தார்.

தேசம் மீதான பற்றால் இந்தியா திரும்பிய டாடா தனது குடும்ப வணிகத்தில் முழு மூச்சாய் களம் இறங்கினார். டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார்.

டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச் சென்றார்.

டாடா குழுமத்தில் பணியாற்றிய ரத்தன் டாடா பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். சுண்ணாம்புக்கல் எடுப்பது தொடங்கி சூளைகளைக் கையாளும் பணிகள் வரை செய்தவர் ரத்தன் டாடா.

1991-ல் டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின் நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது.

ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம்.

டாடா குழுமத்தின் தலைவராக 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார்.

வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலவற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க ரத்தன் டாடா பங்காற்றினார்.

நடுத்தர மக்களின் வாகனக் கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்தவர் ரத்தன் டாடா.

தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன் விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா தன்னம்பிக்கையால் தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்.

தன்னம்பிக்கை, உழைப்பு, அறிவு, தொழில் திறன், அற சிந்தனைக்காக அறியப்பட்டவர் ரத்தன் டாடா.

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரத்தன் டாடா ரூ.1,500 கோடி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News