இந்தியா
ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்.. 3 பேர் கைது
- காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.
ரிசர்வ் வங்கி, எச்.எடி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி. வங்கிகளுக்கு நேற்று (டிசம்பர் 26) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான மின்னஞ்சலில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தா தாஸ், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தப்பட்டு இருந்தது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மிரட்டல் தொடர்பாக குஜராத் மாநிலத்தை அடுத்த வதோதராவை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வங்கிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் ஏமாற்று வேலை என்று தெரியவந்தது.