ரீமால் புயல் பாதிப்பு- ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்ட மம்தா பானர்ஜி
- ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
- கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து ரீமல் என பெயரிடப்பட்ட இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காள தேசத்தின் கேபு பாராவுக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியது.
சூறாவளி காற்றுடன் மிக கனமழையும் பெய்தது. இதனால் மேற்கு வங்காளத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்நாபூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
ஏராளமான இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழையும் பெய்ததால் கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
புயலால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் சுந்தரவன காடுகளில் கோசாபா பகுதியில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். இதுதவிர மேலும் ஒருவர் என மொத்தம் 2 பேர் புயலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH | West Bengal CM Mamata Banerjee conducted an aerial survey of the cyclone-affected areas in South 24 Parganas.
— ANI (@ANI) May 29, 2024
(Source: All India Trinamool Congress) pic.twitter.com/sQVmO5O3K8