காங்கிரசை மறைமுகமாக தாக்கினாரா?: நிர்மலா சீதாராமன் குறிப்பிட்ட தவறான வார்த்தையால் சிரிப்பொலி
- காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.
- ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
புதுடெல்லி :
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பழமையான, காலாவதியான வாகனங்களை அழிக்கும் திட்டம் பற்றி பேசியபோது, தவறான வார்த்தையை உச்சரித்தார்.
'மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் கொள்கை' என்று கூற நினைத்த அவர், 'பழமையான அரசியலை (கட்சியை) மாற்றுவது' என்று தொடங்கினார்.
உடனே ஆளுங்கட்சி தரப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. பழமையான அரசியல் கட்சியான காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜனதா வலிமையான கட்சியாக உருவெடுத்து இருப்பதாக அவர் உள்ளர்த்தத்துடன் பேசியதாக கருதி, ஆளுங்கட்சியினர் சிரித்தனர்.
நிர்மலா சீதாராமன் உடனே சுதாரித்துக்கொண்டு, ''மாசு உண்டாக்கும் பழமையான வாகனங்களை மாற்றுவது தொடர்ச்சியான கொள்கை'' என்று திருத்திக்கொண்டார்.
மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.