இந்தியா

ஆந்திரா வெடி விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு

Published On 2024-08-22 13:29 GMT   |   Update On 2024-08-22 13:29 GMT
  • மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
  • விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

அச்சுதாபுரம் மருந்து நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன்.

அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தைரியம் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், படுகாயமடைந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ. தலா 25 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.

எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்போம். விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News