இந்தியா

அரசியல் அழுத்தத்திற்கு அடிபணியாத அருண் கோயலுக்கு சல்யூட்: மம்தா பானர்ஜி

Published On 2024-03-10 15:09 GMT   |   Update On 2024-03-10 15:09 GMT
  • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
  • மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்

அண்மையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

இதில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது, கூடுதல் மத்திய படைகளை நிறுத்துவதற்கு டெல்லி தலைவர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு பணியாத அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன். மக்களவை தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிக்க பாஜக முயற்சிக்கிறது.

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். பாஜகவை தோற்கடிப்பதில் முழு நாட்டிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும்

தேர்தலுக்கு முன்பு பாஜக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு 100 ரூபாய் உயர்த்துவார்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News