இந்தியா
கடவுளை விட முதல் மந்திரி பெரியவர் அல்ல: அகிலேஷ் தாக்கு
- அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
- இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ம் தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இதற்கிடையே, மூலவர் ராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சமாஜவாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், அது கடவுளின் விழா. கடவுளை விட முதல் மந்திரி பெரியவராக இருக்கமுடியாது. ராமரால் அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செல்வார்கள் என தெரிவித்தார்.