இந்தியா

நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடுக... என்டிஏ-வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2024-07-18 11:11 GMT   |   Update On 2024-07-18 11:11 GMT
  • மாணவர்கள் அடையாளத்தை மறைத்து முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
  • 20-ந்தேதி மதியம் 12 மணிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் தேர்வு (NEET-UG) கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. தேர்வுக்கு முன்னதாக வினாக்கள் வெளியானதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்வு முடிவு வெளியானபோது, பல மாணவர்கள் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை பெற்றனர். இதுகுறித்து தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை சில மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது.

இதனால் மாணவர்கள் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மத்திய அரசு மற்றும் மத்திய தேர்வு முகவை மறு தேர்வு நடத்த சம்மதம் எனத் தெரிவித்தால் அதற்கு ஏற்ப உத்தரவு வழங்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தது.

நீட் தொடர்பான அனைத்து மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையின் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட மறுத்தது.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகவை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் நீட் தேர்வு முடிவை வருகிற 20-ந்தேதி மதியம் 2 மணிக்குள் வெளியிட வேண்டும். மாணவர்கள் பெயர்களை மறைத்து மதிப்பெண்களை வெளியிட வேண்டும் அப்போதுதான் நடந்ததை அறிய முடியும் என நீதிபகள் தெரிவித்தனர்.

அப்போது உத்தரவை மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News