இந்தியா

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

Published On 2023-12-20 05:03 GMT   |   Update On 2023-12-20 05:03 GMT
  • விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் போன்றவை ஏற்றம் கண்டன.
  • மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை கடந்த சில தினங்களாக உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியதும் சிறிது நேரத்தில் மளமளவென உயர்ந்து 71,913.07 புள்ளியில் வர்த்தகமானது. மும்பை பங்கு சந்தையில் இந்த உச்சம் இதுவரை இல்லாததாகும். நேற்று 71.437.19 புள்ளிகள் முடிவடைந்து, இன்று காலை 71,647.66 புள்ளிகளில் தொடங்கியது.

இதுபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டி இன்று காலை 138.8 புள்ளிகள் உயர்ந்து 21,591.90-ல் வர்த்தகமானது. இதுவும் புதிய உச்சமாகும். நேற்று 21453.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று காலை 21,477.65 புள்ளிகளில் தொடங்கியது.

விப்ரோ, இன்போசிஸ், டாடா கல்சல்டன்சி சர்வீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, என்.டி.பி.சி, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றத்தை கண்டன.

மகிந்திரா அண்டு மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யுனிலிவர் போன்றவை சரிவை சந்தித்தன.

ஆசியாவில் ஷாங்காய் பங்கு சந்தை சரிவை சந்தித்த போதிலும் சியோர், டோக்கியோ, ஹாங்காங் போன்ற சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன. 

Tags:    

Similar News