இந்தியா

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: எவ்வளவு தெரியுமா?

Published On 2024-08-12 11:41 GMT   |   Update On 2024-08-12 11:41 GMT
  • அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 46.65 ரூபாய் குறைந்து 3,140.90 ரூபாயாக உள்ளது.
  • அதானி போர்ட் பங்கு இன்று 35.80 ரூபாய் குறைந்து 1,498 ரூபாயாக உள்ளது.

அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் என்று ஹிண்டர்பர்க் நேற்றுமுன்தினம் கூறியிருந்தது.

இதனால் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். முதலீட்டார்கள் லட்சக்கணக்கான கோடிகளை இழக்கும் அபாயும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 79,705.91 புள்ளிகளுடன் ஆரம்பானது. அப்போது சுமார் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமானது. அதன்பின் மெல்லமெல்ல வர்த்தகம் உயர்வை கண்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 80,106.18 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக 3.30 மணிக்கு வர்த்தகம் சென்செக்ஸ் 79,648.92 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தை நிறைவடைந்ததை வர்த்தகம் 56.99 சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து நிறைவடைந்தது.

இந்திய பங்குச்சந்தை நிஃப்டி வெள்ளிக்கிழமை 24,367.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு 24,320.05 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆரம்பமானது. சுமார் 47 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் இன்று அதிகபட்சமாக 105 புள்ளிகள் அதிகரித்து 24,472.80 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இறுதியாக நிஃப்டி 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்ததை விட 20.50 சதவீதம் குறைவாகும்.

அதானியின் டோட்டல் கியாஸ் லிமிடெட் பங்கு 3.95 சதவீதம் குறைந்த 835.50 ரூபாயாக இருந்தது. இன்று 34.35 ரூபாய் சரிவை சந்தித்துள்ளது.

அதானி எனர்ஜி பங்கு 3.25 சதவீதம் குறைந்து 1067.90 ரூபாயாக உள்ளது. இன்று 35.90 ரூபாய் குறைந்துள்ளது. என்டிடிவி பங்கு 2.32 சதவீதம் குறைந்த 203.50 ரூபாயாக உள்ளது. 4.83 ரூபாய் குறைந்துள்ளது.

அதானி பவர் பங்கு 1.24 சதவீதம் குறைந்த 687 ரூபாய் உடன் நிறைவடைந்தது. இன்று 8.40 ரூபாய் குறைந்துள்ளது.

அதானி வில்மர் லிமிடெட் பங்கு 4.10 சதவீதம் குறைந்து 369.35 ரூபாயுடன் நிறைவடைந்தது. இன்று 15.80 ரூபாய் குறைந்துள்ளது.

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் பங்கு இன்று 1.46 சதவீதம் குறைந்து 3,140.90 ரூபாய் உடன் உள்ளது. இன்று 46.65 ரூபாய் குறைந்துள்ளது.

அதானி போர்ட் பங்கு இன்று 2.33 சதவீதம் குறைந்துள்ளது. 1,498 ரூபாயாக உள்ளது. இன்று 35.80 ரூபாய் குறைந்துள்ளது.

Tags:    

Similar News