இந்தியா

வாக்கு எண்ணிக்கை நாளில் தலைகீழாக இறங்கிய மும்பை பங்கு சந்தை இன்று வரலாறு காணாத உச்சம்

Published On 2024-06-07 10:39 GMT   |   Update On 2024-06-07 10:39 GMT
  • கருத்துக் கணிப்பு அடுத்த நாளில் மும்பை பங்குச் சந்தை தாறுமாறாக எகிறியது.
  • பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியதால் வாக்கு எண்ணிக்கை நாளில் தலைகீழாக இறங்கியது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்போது மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படும்.

நிலையான ஆட்சி அமைகிறதா? நிலையறற ஆட்சி அமைகிறதா? என்பதை கருத்தில் கொண்டு முதலீட்டார்கள் முதலீடு செய்வார்கள். முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்வார்கள்.

அதேபோன்றுதான் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. அதில் பிரதமர் மோடி மீண்டும் பதவி வகிப்பார் என தகவல் வெளியானது.

இதனால் திங்கட்கிழமை (ஜூன் 3-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் தாறுமாறுமாக ஏறி வர்த்தகம் ஆனது.

வெள்ளிக்கிழமை மும்பை பங்கு சந்தை வர்த்தகம் 73,961.31 புள்ளிகளுடன் முடிவடைந்தது. திங்கட்கிழமை காலை அதாவது ஜூன் 3-ந்தேதி காலை சுமார் 1600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் தொடங்கியது. அன்றைய தினம் 46,468.78 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகம் முடிவடைந்தது. இதனால் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதாவது ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும். பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை நிலவியதால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் பாதாளத்திற்கு சென்றது. அன்றைய தினம் சுமார் 4 ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

76468.78-ல் இருந்து 72079.05-க்கு இறங்கியதால் முதலீட்டார்கள் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் இழந்தனர் எனத் தகவல் வெளியானது. இது மிகப்பெரிய மோசடி. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தது.

பின்னர் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளுடன் நிலையான ஆட்சி அமைக்கப் போவதாகவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார் எனவும் உறுதியான தகவல் வெளியானது.

அத்துடன் ஆர்பிஐ வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி உயர்த்தப்படாது. இந்தியாவின் ஜிடிபி அதிகரிக்கும் எனத் தெரிவித்தது. இதனால் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்ட்டது.

5-ந்தேதி 3 சதவீதம் உயர்ந்து 74,382 புள்ளியுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றும் ஏறுமுகமாக இருந்து 75,074 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை 75,031 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் சென்செக்ஸ் புள்ளிகள் ஏறிக்கொண்டு இருந்தது. இறுதியாக 76,606 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 76,790.63 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிலான உச்சமாகும்.

Tags:    

Similar News