இந்தியா (National)

மூடா விவகாரத்தில் பின்னடைவு... ராஜினாமா செய்யக் கோரும் பாஜக - சித்தராமையா ரிப்ளை

Published On 2024-09-24 15:37 GMT   |   Update On 2024-09-24 15:37 GMT
  • லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
  • இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா மனைவி பார்வதிக்கு முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். சித்தராமையா மீது வழக்கு தொடரலாம் என கவர்னர் உத்தரவிட்ட நிலையில் தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மூடா முறைகேடு தொடர்பாக சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே லோக்அயுக்தா போலீசார் சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக  போராட்டம் படப்பிறகு வருகிறது.

இந்நிலையில் விசாரணையை எதிர்கொள்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை நடத்துவேன் என்றும். விசாரணை நடத்துவதற்கான உத்தரவு ரத்தாகும். இந்த போராட்டத்தில் மக்கள் என் பக்கம் உள்ளனர். அரசியலமைப்பு எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த போராட்டத்தில் உண்மை ஜெயிக்கும். நான் ஏன் பதவி விலக வேண்டும். ஜாமினில் உள்ள குமாரசாமி பதவி விலகினாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலேயும் தன்மீதான வழக்கு விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதால் அதை தான் எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் சித்தராமையா அடுத்த காட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News