பாபா சித்திக் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை கைதுசெய்த போலீசார்
- பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவானார்.
லக்னோ:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு தொடர்பு உள்ளதும், 3 பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவானார்.
ஷிவ் குமாரை கைதுசெய்ய மும்பை போலீசாரும், உ.பி. சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பஹரைச்சில் ஷிவ் குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் நேபாளத்திற்கு தப்பியோட முயற்சித்தபோது பிடிபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சொல்லியே பாபா சித்திக்கை கொலை செய்ததாக தெரிவித்தார்.