இந்தியா

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா

Published On 2023-05-20 00:31 GMT   |   Update On 2023-05-20 00:31 GMT
  • பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
  • துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள்.

கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுக்கு பிறகு 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைதொடர்ந்து, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார்.

அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் சித்தராமையாவுடன் துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News