இந்தியா

மக்கள் சொத்துகளை எஸ்.பி., காங்கிரஸ் "வாக்கு ஜிஹாத்" செய்பவர்களுக்கு பரிசளிக்கும்: பிரதமர் மோடி விமர்சனம்

Published On 2024-05-17 11:25 GMT   |   Update On 2024-05-17 11:25 GMT
  • காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.
  • எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள்.

இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக "வாக்கு ஜிஹாத்" செய்தவர்களுக்கு கொடுப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள். ஆனால், குண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஹமிர்பூரில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், பா.ஜனதாவின் கன்வார் புஷ்வேந்த்ரா சிங் சண்டல்- சமாஜ்வாடியின் அஜேந்திரா சிங் லோதி ஆகியோருக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது.

Tags:    

Similar News