விமான பெண் ஊழியரிடம் அத்துமீறல்... பயணியை கீழே இறக்கிவிட்டனர்
- பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி, அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரும் இறக்கி விடப்பட்டனர்
புதுடெல்லி:
டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய அந்த ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பயணிக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் ஊழியர் உடனடியாக பாதுகாப்பு படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து, பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்ட பயணி மற்றும் அவருடன் வந்திருந்த மற்றொரு பயணி இருவரையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.
பெண் ஊழியரை தகாத முறையில் அந்த பயணி தொட்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் விமானத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக சக பயணிகள். பின்னர் அந்த
பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார். இருப்பிலும் மேலும் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவர் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆண் பயணி ஒருவர் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை அடுத்து, விமான ஊழியர்களும் பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ (ஏஎன்ஐ) வெளியாகி உள்ளது.