இந்தியா

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On 2024-02-15 06:10 GMT   |   Update On 2024-02-15 06:15 GMT
  • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.
  • தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி  தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தலைமை நீதிபதி ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்சில் சஞ்ஜீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நிதிபதிகள் இடம் பிடித்திருந்தனர்.

எங்களுக்குள் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. எனக்கும், நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் இடையில் இரண்டு கருத்துகள் இருந்தன. அதன்பின் ஒரே முடிவுக்கு வரப்பட்டது. முடிவுக்கு வருவதில் சிறு வேறுபாடு இருந்தது" என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News