இந்தியா

கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது

Published On 2023-05-23 05:34 GMT   |   Update On 2023-05-23 05:34 GMT
  • குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.
  • கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 449 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிட்டோர் கண்டறியப்பட்டனர்.

அவர்களில் 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களில் ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்ற போலீசார் அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதானவர்களில் சிலருக்கு குழந்தை கடத்தலிலும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாகவும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News